கோலாலம்பூர், 25/03/2025 : கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.ஏ-வில், சில கணினி அமைப்புகளைப் பாதித்த இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து நேற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, முழு அளவிலான விசாரணை தொடங்கப்பட்டது.
இச்சம்பவத்தின் தீவிரத்தன்மை குறித்து உடனடியாக ஆராய, தேசிய இணையப் பாதுகாப்பு நிறுவனம், NACSA-விடமும், மலேசிய பொது விமானப் போக்குவரத்து ஆணையம், C-A-A-M-மிடமும் தெரிவிக்கப்பட்டதாக, மலேசிய ஏர்போர்ட்ஸ் குழும நிறுவனம், MAHB நிர்வாக இயக்குநர் டத்தோ முஹ்மட் இசானி கானி தெரிவித்தார்.
தங்களின் அனைத்து பங்குதாரர்களுக்கும் விமான நிலைய செயல்பாடுகளைப் பராமரிப்பதில் முக்கிய கவனம் செலுத்துவதை மலேசிய விமான நிலையங்கள் உறுதிப்படுத்துவதாக டத்தோ முஹ்மட் இசானி குறிப்பிட்டார்.
விமானச் செயல்பாடுகளும் பயணிகள் செயல்முறையும் தொடர்ந்து வழக்கம்போல் இயங்குவதை உறுதிசெய்ய MAHB அதன் பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படுகிறது.
விமான நிலைய அமைப்புகளின் பாதுகாப்பு, உறுதிப்பாடு மற்றும் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதில் தற்போது முன்னுரிமையாக உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டுக் குழுக்கள் நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து, உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும், பயணிகளின் தடையற்ற பயணத்தை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருவதாக முஹ்மட் இசானி கூறினார்.
Source : Bernama
#CyberAttack
#KLIA
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews