கோலாலம்பூர், 26/03/2025 : நோன்பு பெருநாளை முன்னிட்டு டோல் கட்டணத்தில் 50 விழிக்காடு கழிவு வழங்க, அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
மார்ச் 28-ஆம் தேதி தொடங்கி, மார்ச் 29-ஆம் தேதி இரவு மணி 11.59 வரையில், இரண்டு நாள்களுக்கு இந்தக் கழிவு அமலில் இருக்கும் என்று, பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்செண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட டோல் குத்தகை நிறுவனத்திற்கு திரும்ப செலுத்த வேண்டிய இழப்பீட்டு தொகைக்காக, அரசாங்கம் எதிர்கொள்ளும் நிதி தாக்கம் ஒரு கோடியே
96 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட்டாகும் என்று நந்தா லிங்கி தெரிவித்தார்.
தேசிய எல்லையைத் தவிர்த்து, அனைத்து டோல்களிலும் முதல் வகுப்பு வாகனங்கள் உட்படுத்தப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.
Source : Bernama
#TollDiscount
#Raya
#Ramadan
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews