கோலாலம்பூர், 25/03/2025 : தற்போது, கிள்ளான் பள்ளத்தாக்கு அல்லது இதர எந்தப் பகுதியிலும் நெரிசல் கட்டணங்களை அமல்படுத்தும் திட்டம் ஏதும் அரசாங்கத்திற்கு இல்லை.
மாறாக, நாட்டின் பொது போக்குவரத்து அமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் கவனம் செலுத்தப்படுகிறது.
அக்கட்டணத்தை அமல்படுத்துவது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதனைச் செயல்படுத்தும் நிலையை அடையவில்லை என்றும் பொது போக்குவரத்து வசதிகளின் உள்கட்டமைப்பு இன்னும் முழுமையாக இல்லாத நிலையில் அதைச் செயல்படுத்துவது சாத்தியப்படாது என்றும் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்
“எனவே, இன்னும் கட்டணம் விதிக்கும் திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை. இதுவரை எந்த அளவிற்கு பயன் அளிக்கிறது என்பதைப் பார்க்க ஆராய்ச்சி மட்டுமே உள்ளது. இதை கோலாலம்பூரில் செயல்படுத்த விரும்பினால் எப்படி? கோலாலம்பூருக்குள் நுழையை பல வழிகள் உள்ளன. சிங்கப்பூர் போல் இல்லை. சிங்கப்பூரில் இரண்டு அல்லது மூன்று வழிகள் கொண்ட சி.பி.டி மட்டும் இருக்கலாம். பகுதி சிறியது. கோலாலம்பூரில் நுழையை வேண்டும் என்றால் சி.பி.டி மட்டும் நெரிசலாக இருக்காது. சுங்கை பிசியில் நுழைந்தாலும் நெரிசலாக இருக்கும். கெந்திங், கிள்ளான் சாலைகளும் நெரிசலாக இருக்கும். பூச்சோங்கில் இருந்தும் நெரிசலாக இருக்கும். எனவே, எங்கே போவது? நிறைய திட்டமிட்டு ஆய்வுகள் செய்ய வேண்டும்,” என்றார் அவர்.
இன்று மேலவையில் செனட்டர் டான் ஶ்ரீ டத்தோ லோ கியான் சுவானின் கேள்விக்கு அந்தோணி லோக் அவ்வாறு பதிலளித்தார்.
வளர்ச்சி கண்ட நாடுகளின் அனுபவங்கள் அடிப்படையில் ‘first mile’ மற்றும் ‘last mile’ கட்டமைப்பு மற்றும் TOD எனப்படும் போக்குவரத்து சார்ந்த மேம்பாடு உட்பட முழுமையான மற்றும் விரிவான பொது போக்குவரத்து அமைப்பு உருவாக்கப்பட்டப் பின்னரே நெரிசல் கட்டணங்கள் செயல்படுத்தப்படுவதாக அவர் விளக்கினார்.
Source : Bernama
#AnthonyLoke
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews