கோலாலம்பூர், 25/03/2025 : 2024ஆம் ஆண்டு சவால்மிக்க ஆண்டாகவும் அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களின் நம்பகத்தன்மையைச் சோதிக்கும் ஆண்டாகவும் இருந்ததாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு முழுவதும், சமூக ஊடகங்களில் கவனத்தையும் பொதுமக்களின் கருத்தையும் ஈர்க்கும் பல வழக்குகளை வெளிப்படுத்த பிடிஆர்எம்-இன் நம்பகத்தன்மை தேவைப்படுவதாக அவர் கூறினார்.
“2024 ஆம் ஆண்டு முழுவதும் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய குற்றவியல் வழக்குகளில், கோலாலம்பூரில் ஆறு துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களுடன் இஸ்ரேலியர் ஒருவர் கைது செய்யப்பட்டது, ஜோகூரில் உள்ள உலு திராம் போலீஸ் நிலையம் மீதான தாக்குதலில் போலீஸ் உறுப்பினர் பலியான சம்பவம் ஆகியவை அடங்கும்,” என்றார் அவர்.
கோலாலம்பூரில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டின் 218-ஆவது போலீஸ் தினத்தில் உரையாற்றிய போது அவர் அவ்வாறு கூறினார்.
பினாங்கு மாநிலத்திலுள்ள டத்தோ கிராமாட் போலீஸ் நிலையம் மீதான ஆக்கிரமிப்பு சம்பவம் குறித்தும், GISBH எனப்படும் Global Ikhwan Service and Business குழும நிறுவனத்தின் மதத்தைப் பயன்படுத்திய தவறான நடவடிக்கை மற்றும் சிறார்களும் பெண்களும் மீட்கப்பட்டது குறித்தும் டான் ஶ்ரீ ரசாருடின் நினைவுகூர்ந்தார்.
Source : Bernama
#HariPolis
#PDRM
#IG
#TanSriRazarudinHusain
#Agong
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews