தியாகத்தோடும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் கடமையாற்றும் போலீஸ் உறுப்பினர்கள் பாராட்டுக்குரியவர்கள்

தியாகத்தோடும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் கடமையாற்றும் போலீஸ் உறுப்பினர்கள் பாராட்டுக்குரியவர்கள்

கோலாலம்பூர், 25/03/2025 : நாட்டின் அமைதி மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதில் தியாகத்தோடும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் கடமையாற்றும், அரச மலேசிய போலீஸ் படை பிடிஆர்எம்-மைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் மாட்சிமை தங்கிய மாமன்னர், சுல்தான் இப்ராஹிம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

அதோடு, மக்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்றியபிடிஆர்எம்-இன் ஓய்வுப் பெற்றவர்களின் பங்களிப்புகள் மற்றும் சேவைகளையும் அவர் பாராட்டினார்.

கால நேரத்தைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு பிடிஆர்எம் உறுப்பினர்களும் பாதுகாப்புப் படையின் முன்னிலைப் பணியாளர்களாக உள்ளதாக இன்று 218ஆ வது போலீஸ் தினத்தில் சுல்தான் இப்ராஹிம் புகழாரம் சூட்டினார்.

நாட்டின் பொது அமைதியைப் பேணுவதற்காக, சட்டத்தை அமல்படுத்துவதுடன், குற்ற அச்சுறுத்தலில் இருந்து மக்களைப் பாதுகாக்க தங்களின் உயிரைப் பணயம் வைக்கும் போலீஸ் உறுப்பினர்களை இன்று தமது முகநூல் பதிவில் சுல்தான் இப்ராஹிம் பாராட்டினார்.

போலீஸ் பணி என்பது அவ்வளவு எளிதானதல்ல.

மாறாக, முழு அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் அக்கறை ஆகியவை அதற்கு மிகவும் முக்கியமானதாகும்.

இரவு பகல் பாராமல் சேவையாற்றும் பிடிஆர்எம் உறுப்பினர்களின் அனைத்து முயற்சிகளுக்கும், சேவைக்கும் பொதுமக்களும் மதிப்பளிப்பதாக மாமன்னர் கூறினார்.

Source : Bernama

#HariPolis
#PDRM
#Agong
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews