கோலாலம்பூர், 25/03/2025 : பல்வேறு கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகிலுள்ள கிளந்தான், சுங்கை கோலோக் ஆற்றுப் பகுதி முழுவதிலும் மொத்தம் 134 சட்டவிரோத தளங்கள் மூடப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட எல்லைப் பகுதியில் பாதுகாப்புக் கட்டுப்பாட்டை அதிகரிப்பதற்காக பொது நடவடிக்கைப் படை PGA-இன் 18ஆவது படைப்பிரிவு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
”அதேவேளையில், எடுத்துக்காட்டிற்கு 134 சட்டவிரோத தளங்களை உட்படுத்திய ரந்தாவ் பஞ்சாங் – சுங்கை கோலோக் எல்லையை முன்னிலைப்படுத்தும் வகையில் கடல் போலீஸ் மற்றும் பிஜிஏ-வை நாங்கள் கோடிட்டு காட்டியுள்ளோம். அதை அனைத்தையும் நாங்கள் மூடிவிட்டோம். மேலும், அப்பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்த செனாய் பிராக் குழுவையும் நாங்கள் அங்கு நிறுத்தியுள்ளோம்,” என்றார் அவர்.
இன்று, போலீஸ் பயிற்சி மையம் பூலாபோலில் நடைபெற்ற 218ஆம் ஆண்டு போலீஸ் தினத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் அவ்வாறு கூறினார்.
சட்டவிரோத குடியேறிகள், போதைப்பொருள் கடத்தல், எல்லைக்கடந்த குற்றச்செயல் போன்றவற்றைத் தடுக்க Ops Pagar Laut சோதனை நடவடிக்கையின் வழி, மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews