கோலாலம்பூர், 25/03/2025 : ஒரு கோடி அமெரிக்க டாலர் மீட்புத் தொகை கோரி அண்மையில் Malaysia Airports குழும நிறுவனம், MAHB இலக்கவியல் அமைப்பு இணையத் தாக்குதலுக்கு ஆளானது.
இவ்விவகாரம் குறித்தத் தகவலை வெளியிட்ட பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்ட மிரட்டலுக்கு அரசாங்கம் அடிபணியாது என்று கூறியுள்ளார்.
“இணையத் தாக்குதல் மேற்கொண்டவர்களின், ஒரு கோடி அமெரிக்க டாலர் நிதி கோரிக்கை உட்பட இவ்விவகாரத்திற்கு எவ்வாறு தீர்வு காண்பது குறித்த கலந்துரையாடல் தொடர்பில் எனக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த ரமலான் மாதத்தில், நான் ஒரு ஐந்து வினாடி கூட காத்திருக்கவில்லை. உடனடியாக முடியாது என்று பதிலளித்து விட்டேன். நாம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் குற்றச்செயல் புரிபவர்கள் மற்றும் துரோகிகளிடம் அடிபணிய தலைமைத்துவமும் அமைப்பும் அனுமதித்தால், இந்நாடு பாதுகாப்பாக இருப்பதற்கான சாத்திய இருக்காது,” என்றார் அவர்.
எனினும், டத்தோ ஶ்ரீ அன்வார் MAHB அமைப்பு மீதான இணையத் தாக்குதல் குறித்து மேலும் விரிவான தகவல்களை வழங்கவில்லை.
Source : Bernama
#PmAnwar
#MAHB
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews