போதைப் பொருள் விநியோகிப்பில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட கணவன் மனைவி கைது

போதைப் பொருள் விநியோகிப்பில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட கணவன் மனைவி கைது

ஈப்போ, 24/03/2025 : போதைப் பொருள் விநியோகிப்பில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட கணவன் மனைவி தம்பதியினர், கடந்த வியாழக்கிழமை, பேராக், ஈப்போ, தாமான் கன்னிங்கில் உள்ள எரிவாயு நிலையம் ஒன்றில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 11 கோடியே 90 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.

30 வயதுடைய கணவனையும் 29 வயதுடைய மனைவியையும் பிற்பகல் மணி 2.30 அளவில் தமது தரப்பு கைது செய்ததாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிஷாம் நோர்டின் தெரிவித்தார்.

“புகார் அளித்தவரும் போலீஸ் குழு ஒன்றும் செமோரில் உள்ள அத்தம்பதியினரின் வீட்டிற்குச் சென்று சோதனை செய்தபோது, ​​மெத்தம்ஃபெட்டமைன் போதைப் பொருள் என்று சந்தேகிக்கப்படும் ஆறு பாட்டில்களை கண்டெடுத்தனர்”, என்று அவர் கூறினார்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அப்பெண் Benzodiazepine வகை போதைப் பொருளை உட்கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதோடு, அவ்வாடவர் போதைப் பொருள் தொடர்பிலான குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளார்.

1952-ஆம் ஆண்டு அபாயகரப் போதைப் பொருள் சட்டம் செக்‌ஷன் 39பி-இன் கீழ் விசாரணைக்கு உதவ சந்தேக நபர்கள் இருவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த எரிவாயு நிலையத்தில் உள்ள பொருள் அனுப்பும், பெறும் சேவை முகப்பில் இருந்த அவ்வாடவர், Methamphetamine வகை போதைப் பொருள் அடங்கியதாகச் சந்தேகிக்கப்பட்ட, ஆரோக்கிய பான முத்திரையிலான நெகிழி மற்றும் கண்ணாடி பாட்டில்கள் ஆறை வைத்திருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Source : Bernama

#DrugTrafficking
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews