சீ & பாரா ஆசியான் விளையாட்டுகளுக்காக 14 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு

சீ & பாரா ஆசியான் விளையாட்டுகளுக்காக 14 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு

கோலாலம்பூர், 24/03/2025 : 2027 சீ மற்றும் பாரா ஆசியான் விளையாட்டுகளுக்கான வீரர்களை தயார் செய்ய இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு 14 கோடியே 60 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.

2017-ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடந்த போட்டியைவிட இது 20 விழுக்காடு அதிமாகும்.

2024-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட போடியம் திட்டத்தின் மூலம் இந்த ஒதுக்கீடு கட்டம் கட்டமாக பயன்படுத்தப்படும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா யோ கூறினார்.

“போடியம் திட்டத்தின் கீழ் சிறந்த விளையாட்டு வீரர்களின் பயிற்சியை நிர்வகிக்க போதிய நிதியை அமைச்சு வழங்கியுள்ளது. பயிற்சியாளர் வழங்கும் பயிற்சித் திட்டத்தின் மூலம் அவர்களின் செயல்திறனை மேம்படுத்த முடியும்,” என்றார் அவர்.

போடியம் திட்டத்தில் காமன்வெல்த் விளையாட்டுகள், ஆசிய விளையாட்டுகள் மற்றும் 2028 ஒலிம்பிக்ஸ் போன்ற பிற அனைத்துலக விளையாட்டுகளுக்கான தயார்நிலை பணிகளும் அடங்குவதாக இன்று மேலவையில் கேள்வி பதில் நேரத்தின்போது அவர் கூறினார்.

Source : Bernama

#SEAGames
#ParaASEANGames
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews