சுங்கை பட்டாணி, 24/03/2025 : அண்மையில், கெடா, சுங்கை பட்டாணியில் உள்ள உயர்கல்விக் கழகம் ஒன்றில் மாணவி ஒருவரைக் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்ததாக, 19 வயது இளைஞர் ஒருவர் இன்று சுங்கை பட்டாணி செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
எனினும், நீதிபதி ரொஸ்லான் ஹமிட் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டை, பினாங்கு, பட்டர்வெர்ட்டைச் சேர்ந்த பி.வஷிகரன் மறுத்துள்ளார்.
இம்மாதம் 17-ஆம் தேதி, காலை மணி 10-க்கு சம்பந்தப்பட்ட உயர்கல்விக்கழகத்தின் கட்டிடம் ஒன்றில், கத்தியைப் பயன்படுத்தி 19 வயதுடைய பி.கீர்த்தனா என்ற மாணவியைக் காயம் ஏற்படும் அளவிற்குக் கொலை செய்ய முயற்சித்ததாக, வஷிகரன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 307-இன் இவ்விழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர் அடிக்கடி தன்னை துன்புறுத்துவதாக, கடந்த பிப்ரவரி மாதம் அப்பெண் போலீஸ் புகார் செய்துள்ளார்.
சம்பந்தப்பட்ட இளைஞர் பாதிக்கப்பட்டவருக்கு இடையூறு விளைவிக்கலாம் என்பதால் அவரை ஜாமினில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை.
இவ்வழக்கு விசாரணை மே 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Source : Bernama
#CrimeNews
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews