கோலாலம்பூர், 24/03/2025 : மலேசியாவில் கடந்தாண்டில் புதிதாக பதிவான எச்.ஐ.வி நோய் சம்பவங்களில் 90 விழுக்காடு ஆண்களை உட்படுத்தி உள்ளது.
அதில், நான்கில் மூன்று சம்பவங்கள் 20-இல் இருந்து 39 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் தொடர்புடையதாகும்.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த நோய்ச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், இளைஞர்களிடையே அத்தொற்று அதிகரித்து வருவது கவலையளிப்பதாகவும், இதில் ஓரின பாலியல் உறவு கொண்டவர்களும் அடங்குவர் என்றும் சுகாதார துணை அமைச்சர் லுக்கானிஸ்மான் அவாங் சௌனி தெரிவித்தார்.
ஆண்களை ஓரின உறவுகளில் இணைக்கும் சமூக செயலிகளின் அதிகரிப்பும் இந்தப் பிரச்சனைக்கு வித்திட்டுள்ளதாக லுக்கானிஸ்மான் அவாங் சௌனி குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி, அதிக ஆபத்துள்ள வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்கும் உலகளாவிய பிரச்சாரங்களும் இதற்கு காரணம் என்று அவர் கூறினார்.
“இந்த வகையான வாழ்க்கை முறை சாதாரணமானது என்ற தோற்றத்தை ஊக்குவிக்கும் மற்றும் ஏற்படுத்தும் ஓர் உலகளாவிய அலை, போக்கு அல்லது பிரச்சாரத்திற்கு நாம் ஆளாகிறோம். நாம் ஒரு இஸ்லாமிய நாடு. இந்த வாழ்க்கை முறை சரியில்லாத ஒன்று”, என்று அவர் கூறினார்.
இன்று, மேலவை கேள்விபதில் நேரத்தின்போது அவர் அதனைத் தெரிவித்தார்.
Source : Bernama
#HIV
#AIDS
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews