பிரிக்ஸ் நாடுகளின் பங்காளியாக மலேசியா; சந்தை அணுகலை விரிவுபடுத்தும்

பிரிக்ஸ் நாடுகளின் பங்காளியாக மலேசியா; சந்தை அணுகலை விரிவுபடுத்தும்

கோலாலம்பூர், 24/03/2025 : பிரிக்ஸ் நாடுகளின் பங்காளியாக மலேசியா பங்கேற்பது சந்தை அணுகலை விரிவுபடுத்துவதற்கும் ஒரு பாரம்பரிய சந்தையை மட்டுமே சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் அதிக வாய்ப்பை ஏற்படுத்தும்.

தென்னாப்பிரிக்கா, பிரேசில், சீனா, இந்தியா, ரஷ்யா, ஐக்கிய அரபு சிற்றரசு, போன்ற பிரிக்சில் உள்ள நாடுகள் உடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த பங்கேற்பு மலேசியாவிற்கு வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

அதோடு, ஆசியான் உறுப்பு நாடாக மலேசியாவின் நிலைக்குப் பயனளிக்கும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.

“அது தடை அல்ல. அதற்கு எந்த ஒப்பந்தங்களும் இல்லை. உறுப்பு நாடுகளிடமிருந்து அவர்கள் கடைபிடிக்க வேண்டிய உறுதிமொழியும் இல்லை. பிரிக்ஸ் பங்காளி நாடாக இருக்க மலேசியா கையெழுத்திட வேண்டிய எந்த ஒப்பந்தமும் இல்லை. அவர் ஒரு தளர்வான ஒன்றியம். எங்களுக்கு இது ஒரு வர்த்தக திட்டமாகும்”, என்று அவர் கூறினார்.

இன்று, மேலவையில் செனட்டர் டத்தோ லிம் பெய் ஹென் எழுப்பியக் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் இவ்வாறு பதிலளித்தார்.

பிரிக்ஸ் பங்காளி நாடாக பங்கேற்பதற்கு எந்தவொரு ஒப்பந்த உறுதிமொழியும் தேவையில்லை என்றும், தாய்லாந்து, வியட்நாம் உட்பட மலேசியாவும் ஆசியான் வட்டாரத்திற்கான பிரிக்ஸ் பங்காளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Source : Bernama

#BRICS
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews