நாடு முழுவதும் பாலர்பள்ளிகள் அதிகப்படுத்தப்படும்

நாடு முழுவதும் பாலர்பள்ளிகள் அதிகப்படுத்தப்படும்

கோலாலம்பூர், 24/03/3035 : உட்புறப் பகுதிகள் மற்றும் பூர்வக்குடி வசிப்பிடங்கள் உட்பட நாடு முழுவதும் பாலர்பள்ளி கல்வி வசதியை விரிவுபடுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

அதிகமான சிறுவர்கள் தரமான தொடக்கக் கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இம்முயற்சி அமைந்துள்ளதாக கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.

“பாலர்பள்ளிகளை விரிவுபடுத்துவது கல்வி அமைச்சின் கல்வி சீர்திருத்தத்தின் முக்கிய அங்கமாகும். இது பொருத்தமான வசதிகள் மற்றும் உபகரணங்களைக் கொண்ட அமைச்சின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதோடு, பாலர்பள்ளிக்கான அணுகல் கிராமப்புற அல்லது உட்புறப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும் கல்வி அமைச்சு செயல்பட்டு வருகிறது. இது, அதிகமான சிறார்கள் பாலர் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும்”, என்று அவர் கூறினார்.

இன்று, மேலவையில் அவர் அதனைக் கூறினார்.

கடந்தாண்டு, கல்வி அமைச்சு கூடுதல் புதிய 134 பாலர் பள்ளிகளைத் தொடங்கியதாக வோங் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு, 150 பாலர் பள்ளிகளை அதிகரிக்கும் நோக்கத்துடன் 10 கோடியே 50 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

Source : Bernama

#Kindergarten
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews