கோலாலம்பூர், 22/03/2025 : நாட்டில் கோழி முட்டையின் கையிருப்பு தொடர்ந்து போதமானதாக உள்ளதோடு, உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நிலையாக இருப்பதாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு (கே.பி.கே.எம்) உத்தரவாதம் அளித்துள்ளது.
கே.பி.கே.எம் மற்றும் உள்நாட்டு முட்டை உற்பத்தியாளர்களுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் வழி, தினசரி முட்டை உற்பத்தி நிலையாகவும் திருப்தியளிக்கும் வகையிலும் இருப்பது உறுதிசெய்யப்படும் என்று விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹ்மட் சாபு தெரிவித்தார்.
விநியோக நிலைத்தன்மையை உறுதிசெய்ய, தோட்டம் தொடங்கி இறுதி பயனீட்டாளர் வரையில் உற்பத்தி மற்றும் விநியோகிப்பில் KPKM எப்போதும் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளும் என்று முஹ்மட் சாபு கூறினார்.
மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் அமைச்சுடனான வியூக ஒத்துழைப்பின் வழி அமலாக்க நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்படும் என்று, இன்று கே.பி.கே.எம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில், கோழி முட்டை விலை திடீர் உயர்வு கண்டிருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதோடு, வெளிநாடுகளுக்கு கோழி முட்டை கடத்தப்படும் சாத்தியம் உள்ளதாக கூறப்படுவது குறித்து விளக்கமளிக்க இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அண்மைய நிலவரங்களை அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வரும் வேளையில், உணவு விநியோகம் போதுமானதாக இருப்பதை உறுதி செய்ய, தேவைப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாபு கூறினார்.
Source : Bernama
#EggStock
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews