சிலாங்கூரில் உணவுக் கிடங்கு அறிமுகம்

சிலாங்கூரில் உணவுக் கிடங்கு அறிமுகம்

கோலாலம்பூர், 22/03/2025 : அவசரநிலை அல்லது பேரிடரை எதிர்கொள்ளும் போது, உணவு கையிருப்பை உறுதி செய்யும் முயற்சிக்காக, உணவுக் கிடங்கை நிறுவிய முதல் மாநிலமாக சிலாங்கூர் திகழ்கிறது.

ஐயாயிரம் டன் அரிசி மற்றும் பத்து லட்சம் கிலோ கிராம் எடையிலான உறைந்த இறைச்சியை சேமிப்பதன் மூலம், G-M-S (ஜி.எம்,எஸ்) எனப்படும் சிலாங்கூர் உணவுக் கிடங்கை, அம்மாநில மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

உணவுப் பொருள்களின் விநியோகம், நிலையான விலை, விநியோகத்தை வலுப்பெறச் செய்தல் ஆகியவற்றுடன் உள்நாட்டு தொழில் முனைவோர் மற்றும் விவசாயிகளை ஆதரிக்கும் வகையில் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதும் GMS-இன் நோக்கம் என்று அமிருடின் ஷாரி கூறினார்.

பெரிய அளவிலான பேரிடர், தொற்றுநோய் மற்றும் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு போன்ற நேரங்களிலும், ஜி.எம்,எஸ் துணையுடன் மூன்று மாதத்திற்கு உணவு விநியோகிக்க முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்..

சில நேரங்களில் சில காரணங்களை முன்னிறுத்தி பொருள்களின் விலை உயர்வு காணும் வேளையிலும், ஜி.எம்,எஸ் வழி மக்களுக்கு நியாயமான விலையில் பொருள்களை விற்க முடியும் என்று அவர் கூறினார்.

அல்லது, இலவசமாக வழங்குதன் மூலமாகவும் மக்களுக்கான உதவித் தொகையை சேமிக்கலாம் என்று அமிருடின் விவரித்தார்.

இன்று, பண்டார் சுல்தான் சுலைமானில் உள்ள Tiong Nama Logistics,கிடங்கில் GMS-சை அறிமுகப்படுத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.

Source : Bernama

#GMS
#Selangor
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews