கோலாலம்பூர், 22/03/2025 : லிங்கிரான் தெங்கா உத்தாமா, LTU நெடுஞ்சாலை, விரைவில் திறக்கப்படும் என்றத் தகவலைப் பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்செண்டர் நந்தா லிங்கி மறுத்துள்ளார்.
அப்பாதை இன்னும் நிர்மாணிப்பில் உள்ளதோடு, வரும் ஆகஸ்ட் மாதத்திலேயே அப்பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
ரவூப், கோல லிப்பிஸ் மற்றும் குவா முசாங் ஆகிய பகுதிகளை உட்படுத்திய LTU செக்ஷன் 4A நெடுஞ்சாலையின் ஒரு பகுதி நோன்புப் பெருநாளை முன்னிட்டு திறக்கப்படுவதாக சமூக வலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருவது குறித்து நந்தா லிங்கி விவரித்தார்.
சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலையைக் குறிப்பாக நோன்பு பெருநாள் காலக்கட்டத்தில் பயன்படுத்த மக்கள் ஆர்வமாக உள்ளதை தாம் அறிவதாக அவர் கூறினார்.
எனினும், இதன் தொடர்பில் தவறான தகவல்களைப் பகிர வேண்டாம் என்று NANTA LINGGI அறிவுறுத்தினார்.
இதுபோன்ற தவறான தகவல்கள், சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலையும் ஆபத்தையும் ஏற்படுத்தும் என்று அவர் நினைவுறுத்தினார்.
சம்பந்தப்பட்ட சாலை நிர்மாணிப்புப் பணிகள் 83.21 விழுக்காடு நிறைவடைந்துள்ளதோடு, வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பொதுப்பணி துறை குறிப்பிட்டுள்ளது.
Source : Bernama
#LTU
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews