POP இரண்டாம் கட்டத்திற்கு ஜோகூரில் 568 பகுதிகள் தேர்வு

POP இரண்டாம் கட்டத்திற்கு ஜோகூரில் 568 பகுதிகள் தேர்வு

ஜோகூர்பாரு, 22/03/2025 : POP எனப்படும் இணைய தொடர்பு புள்ளிகளின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்துவதற்காக ஜோகூர் மாநிலத்தில் 568 பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அந்த எண்ணிக்கையில், பள்ளிகள் கட்டி முடிக்கப்பட்ட இடங்களில் உள்ள 17 பகுதிகளும் அடங்கியிருப்பதாக தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.

அம்மாநிலத்தில், முதல் கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 55 பள்ளிகளில் P-O-P திட்டம் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தியோ தெரிவித்தார்.

POP திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்துவதற்கு, தமது நாடாளுமன்றத்தின் கீழுள்ள இரண்டு பள்ளிகள் உட்பட செடெனாக் தொழிற்துறை பகுதியும் தகுதி பெற்றுள்ளதாக பூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய அவர் கூறினார்.

அத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு பூலாய் நாடாளுமன்றத்தின் கீழ் 12 பள்ளிகள் மத்திய புள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தியோ தெரிவித்தார்.

இன்று ஜோகூர் பாரு பண்டார் செனாயில், தேசிய தகவல் பரப்பு மையமான NADI தொடக்க விழாவில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

Source : Bernama

#POP
#Johor
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews