ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏழு பள்ளிகள் மூடப்பட்டன

ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏழு பள்ளிகள் மூடப்பட்டன

ஜோகூர் பாரு, 21/03/2025 : ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, ஜோகூர் பாரு, கோத்தா திங்கி மற்றும் பாசிர் கூடாங் ஆகிய பகுதிகளில் உள்ள ஏழு பள்ளிகள், இன்று மூடப்பட்டன.

ஜோகூர் பாரு, கூலாய், பொந்தியான், கோத்தா திங்கி, குளுவாங் மற்றும் பாசிர் கூடாங் மாவட்டங்களைச் சேர்ந்த 47 பள்ளிகள், தற்காலிக வெள்ள நிவாரண மையம் PPS (பி.பி.எஸ்)-களாக செயல்பட்டு வருவதாக, கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் கூறினார்.

ஜோகூரில் இதுவரை, 886 மாணவர்கள் PPS-யில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக, அவர் தெரிவித்தார்.

பள்ளிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், ஜோகூர் பாரு, கோத்தா திங்கி மற்றும் பாசிர் கூடாங்கில் முறையே ஒரு பள்ளி என மூன்று பள்ளிகளில் மூடப்பட்டுள்ளன.

மேலும், பொந்தியான் மாவட்டத்தில் அதிகமான பள்ளிகள் என 13 பள்ளிகள், பி.பி.எஸ்-களாக செயல்பட்டு வருவதாக, ஃபட்லினாதெரிவித்தார்.

இன்று, ஜோகூர், ஶ்ரீ கென்சானா சிம்பாங் ரெங்காம் தேசிய பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் பி.பி.எஸ்-யைப் பார்வையிட்ட பின்னர், ஃபட்லினா செய்தியாளர்களிடம் பேசினார்.

Source : Bernama

#Johor
#Floods
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews