அரசாங்க ஊழியர்களுக்கு நோன்புப் பெருநாள் சிறப்பு உதவி நிதியாக 500 ரிங்கிட்

அரசாங்க ஊழியர்களுக்கு நோன்புப் பெருநாள் சிறப்பு உதவி நிதியாக 500 ரிங்கிட்

சிப்பாங், 21/03/2025 : கிரேட் 56 மற்றும் அதற்கும் கீழுள்ள அனைத்து பொதுச்சேவைத் துறை ஊழியர்களுக்கும், BKK எனப்படும் நோன்புப் பெருநாள் சிறப்பு உதவி நிதியாக 500 ரிங்கிட் வழங்குவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், ஓய்வூதியம் பெறும் மற்றும் ஓய்வூதியம் பெறாத அனைத்து பணி ஓய்வு பெற்ற அரசாங்கப் பணியாளர்களுக்கும் 250 ரிங்கிட் வழங்கப்படும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

”கடந்த பிப்ரவரியிலே இதற்கு தீர்வு கண்டிருந்தாலும், நிர்வாகமும் அதனை உட்படுத்திய அவர்களின் சேவையும் நேர்மையும் சிறப்பாக இருந்ததை நான் நினைவில் வைத்திருக்கிறேன். எனவே நான் முடிவு செய்தேன். அதன்படி அடுத்த வாரத்தில் கிரேட் 56 மற்றும் அதற்கும் கீழுள்ளவர்களை உட்படுத்திய பொதுச்சேவைத்துறை ஊழியர்களுக்கு 500 ரிங்கிட்டும் ஓய்வு பெற்றவர்களுக்கு 250 ரிங்கிட்டும் வழங்க தீர்மானித்தோம்,” என்றார் அவர்.

இந்த சிறப்பு உதவி நிதி அடுத்த வாரம் வழங்கப்படும்.

100 கோடி ரிங்கிட்டை உட்படுத்திய இந்த நோன்புப் பெருநாள் சிறப்பு உதவிநிதி மூலம், நாடு தழுவிய அளவிலுள்ள 16 லட்சம் பொதுச்சேவைத் துறை ஊழியர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்ற அரசுப் பணியாளர்கள் பயனடைவார்கள்.

Source : Bernama

#PMAnwar
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews