லீமா 25-இல் உயர்கல்வி கழகங்களின் கண்காட்சியும் இடம்பெறும்

லீமா 25-இல் உயர்கல்வி கழகங்களின் கண்காட்சியும் இடம்பெறும்

கோலாலம்பூர், 21/03/2025 : மே 20-ஆம் தேதி தொடங்கி மே 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள லீமா’25 எனப்படும் லங்காவி அனைத்துலக விமானம் மற்றும் கடல்சார் கண்காட்சியில் உயர்கல்வி கழகங்களின் கண்காட்சியும் இடம்பெறும்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இக்கண்காட்சி புத்தாக்கம், கல்வி மற்றும் நிலைத்தன்மை ஆகிய கூறுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

;;முதல் முறையாக பொது பல்கலைக்கழகங்களின் ஈடுபாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறோம். இந்த முறை உயர்கல்விக்காக ஒரு கண்காட்சியை வைத்துள்ளோம். எனவே, லீமா 25-க்கு மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்,” என்று உலகளாவிய கண்காட்சிகள் மற்றும் மாநாடுகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், அப்துல் அஃபிஸ் ஏ பாக்கார் தெரிவித்தார்.

தற்காப்பு அமைச்சு மற்றும் ஜி.இ.சி இணை ஏற்பாட்டில், விண்வெளி பிரிவு கண்காட்சி, எம்.ஐ.இ.சி எனப்படும் மஹ்சூரி அனைத்துலக கண்காட்சி மையத்திலும், கடல்சார் பிரிவு கண்காட்சி, லங்காவி ‘ரிசோர்ட் வேர்ல்ட்’ எனும் இடத்திலும் நடைபெறவுள்ளது.

இரு வான் சாகச அணிகளான ரஷ்யன் நைட்ஸ் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சூர்ய கிரண் ஆகிய அணிகள் தங்களது பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளன.

மார்ச் 16-ஆம் தேதி, சுமார் 10,000 டிக்கேட்கள் விற்கப்பட்டுள்ளன.

Source : Bernama

#LIMA25
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews