புத்ராஜெயா, 21/03/2025 : இவ்வட்டாரத்தில் விமானத் துறையின் மீட்சிக்கு ஏற்ப மலேசிய விமானத் தொழில்துறை முழுமையாக மீட்சி பெற்று வருவதோடு தொடர் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உறுதியான அடிப்படை தளத்தை உருவாக்கி வருகிறது.
“Revenue Passenger Kilometres,”RPK-வில், ஆசிய பசிபிக் விமான நிறுவனத்தின் வருடாந்திர வளர்ச்சி, கடந்தாண்டைக் காட்டிலும், 16.9 விழுக்காட்டு அதிகரித்துள்ளதை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சுட்டிக்காட்டினார்.
அந்த வளர்ச்சி மீட்சி பெறுவதற்கான ஆற்றலைக் காட்டுவதோடு, மலேசிய விமானத் துறையின் நிலைத்தன்மையையும் பிரதிபலிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
“இது மலேசியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் உள்ள மீட்சியைக் காட்டுகிறது. இது நமது மீட்சித் திறனை மட்டுமல்லாமல் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கான உறுதியான அடித்தளத்தையும் உருவாக்குகிறது. ஆசியானின் மையப்பகுதியில் மலேசியா, வியூக ரீதியாக அமைந்துள்ளதால் நாம் ஆசியாவிற்கும் அதை கடந்தும் ஒரு நுழைவாயிலாக இருக்கிறோம்”, என்று அவர் கூறினார்.
புத்ராஜெயாவில் நடைபெற்ற மலேசிய விமானப் போக்குவரத்து குழுமம், எம்.எ.ஜி-யின் Narrowbody விமானத்தை மாற்றுவதற்கான ஆவணங்களைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சியில் டத்தோ ஶ்ரீ அன்வார் உரையாற்றினார்.
2026 மலேசியாவைச் சுற்றி பார்க்கும் ஆண்டை முன்னிட்டு, நிலையான உயர் மதிப்பு கொண்ட பொருளாதார மேம்பாட்டிற்கும், புத்தாக்கத்திற்கு ஆதரவளிக்கும், முதலீடுகளைக் கவரவும் மற்றும் அனைத்துலக அளவில் மலேசியாவின் நிலையை உயர்த்தும் பொருளாதாரத்தை ஏற்படுத்தவும், மலேசியா உறுதி கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
Source : Bernama
#MalaysianAviationGroup
#MAG
#PMAnwar
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews