நீரிழிவு நோயாளிகள் தினமும் இன்சுலின் செலுத்துவது அவசியமா ?

நீரிழிவு நோயாளிகள் தினமும் இன்சுலின் செலுத்துவது அவசியமா ?

கோலாலம்பூர், 19/03/2025 : 2022-ஆம் ஆண்டு வரை நீரிழிவு நோயினால் 83 கோடி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சுமார் 20 லட்சம் பேர் அதனால் பலியாகியிருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.

பெரியவர்களைக் கடந்து இளயோர் சிறியோர்களையும் பாதிக்கும் இந்த நீரிழிவு நோயின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க மருந்து மாத்திரைகளை அடுத்து இன்சுலின் செலுத்திக் கொள்வது முக்கிய தீர்வாக உள்ளது.

அப்படி, இன்சுலின் செலுத்திக் கொள்ளும்போது, நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்கள் குறித்து விளக்குகின்றார், சிறுநீரக நிபுணர் டாக்டர் ஜமுனா ராதாகிருஷ்ணா.

தற்போது நீரிழிவு நோய் என்பது வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கிறது.

5 வயது குழந்தை தொடங்கி 20 வயது இளைஞர்கள் வரை இந்நோயால் அதிகம் பாதிக்கப்படும்போது, அதனைக் கட்டுக்குள் வைத்திருக்க தினமும் இன்சுலின் செலுத்திக் கொள்பவர்களும் உள்ளனர்.

அதற்கு முதலில், அந்நோயின் வகை குறித்து தெரிந்திருக்க வேண்டியது அவசியம் டாக்டர் ஜமுனா ராதாகிருஷ்ணா விளக்கினார்.

“முதல் வகை நம்முடைய கணையம், அது ஒரு ஆர்மோன் சுரக்கும் உறுபு. ஆக, இந்த கணையம் முழுமையாக இன்சுலின் சுரக்காதபோது அதனை முதல் வகை நீரிழிவு என்று சொல்லுவோம். இம்மாதிரியான நோயாளிகள் கண்டிப்பாக இன்சுலின் எடுத்தாக வேண்டும். இரண்டாம் வகை நீரிழிவு கணையம் தான் இன்சுலின் சுரக்கும். ஆனால், இன்சுலின் பற்றாக்குறையோ அல்லது சரியான முறையில் வேலைப்பாடு இல்லையென்றால் அதனை இரண்டாவது வகை நீரிழிவு என்று சொல்வார்கள்”, என்றார் அவர்.

இந்த நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த வாழ்க்கை முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் மற்றும் பழக்கங்கள் குறித்தும் அவர் விவரித்தார்.

உணவு முறைகள் மற்றும் தினசரியாக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை மாற்றி அமைக்கு வழிமுறைகள் குறித்தும் டாக்டர் ஜமுனா குறிப்பிட்டார்.

“நிறைய சக்கரை உட்கொள்பவர்கள், இனிப்பு சார்ந்த உணவுகள் உட்கொள்பவர்கள், கார்போஹைட்ராட் நிறைய சோறு சாப்பிடுபவர்கள், ரொட்டி, மீ போன்ற உணவுகளை உட்கொள்பவர்களும் நீரிழிவு நோய் உடனடியாக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது”, என்று அவர் கூறினார்.

உடல் பயிற்சிகளின் மூலம் உடல் எடையைக் குறைப்பதனால், செலுத்திக் கொள்ளும் இன்சுலின் சிறந்த விளைவைக் கொடுக்கும் என்றார் அவர்.

அதோடு, மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு இணங்க மருந்துகளைத் தவறாது உட்கொள்வதன் மூலம் இன்சுலினின் தன்மை இன்னும் அதிகமாக சுரப்பதற்குத் துணைச் செய்யும் என்று அவர் விளக்கினார்.

இதனிடையே, இரத்தத்தில் உள்ள GLUKOSE அளவைக் கட்டுப்படுத்தும், இன்சுலினைச் செலுத்த தவறுபவர்கள் எதிர்நோக்கக் கூடிய சிக்கல்கள் குறித்து, டாக்டர் ஜமுனா இவ்வாறு விவரித்தார்.

“குலுகோஸ் அளவு அதிகமாக இரத்தத்தில் போகும்போது கண் பார்வை இழப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது, சீறுநீரக பை எளிதில் பழுதடைந்து விடும், பக்கவாதம், காலில் புண்கள் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்கள், இருதய நோய் வருவதற்கு வழிவகுக்கின்றது”, என்றார் அவர்.

எனவே, மருத்துவரிடம் முறையான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதுடன், அது குறித்து நன்கறிந்துக் கொண்டு நீரிழிவு நோயாளிகள் இன்சுலின் செலுத்திக் கொள்ளுமாறு, இன்றைய நலம் வாழ அங்கத்தில் டாக்டர் ஜமுனா ராதாகிருஷ்ணா அறிவுறுத்தினார்.

Source : Bernama

#Insulin
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews