கோலாலம்பூர், 19/03/2025 : காற்பந்து விளையாட்டளர்கள் போன்று நாட்டின் விளையாட்டுத் துறையில் ஈடுபடும் வெளிநாட்டினருக்கான மலேசிய குடியுரிமை விண்ணப்பம் கடுமையான சட்டத்தின்படி மேற்கொள்ளப்படுகிறது.
ஒவ்வொரு விண்ணப்பத்திற்கான முடிவும், முறையான செயல்முறையைப் பின்பற்றியே மேற்கொள்ளப்படுவதாக உள்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசரா தெரிவித்தார்.
இந்த செயல்முறை கூட்டரசு அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19 மற்றும் அதே அரசியலமைப்பு, பகுதி மூன்றில் இடம்பெற்றுள்ள நிபந்தனைகளை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் கூறினார்.
“இதுபோன்ற விவகாரங்களில் நாங்கள் எந்த வகையிலும் சமரசம் செய்ய மாட்டோம். எனவே ஒவ்வொரு விண்ணப்பதாரரும் தனிப்பட்ட தகுதி மற்றும் நாட்டிற்குச் செய்யக்கூடிய குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளின் அடிப்படையில் பரிசீலிக்கப்படுவார்கள். ஆனால் குடியுரிமை வழங்குவது விளையாட்டுத் தேவைகளை மட்டுமே சார்ந்தது அல்ல. மாறாகக் கூட்டரசு அரசியலமைப்பில் உள்ள நிபந்தனைகள் மற்றும் அளவுகோல்களுடன் முழுமையாக இணங்குவதற்கு உட்பட்டது,” என்று அவர் தெரிவித்தார்,
வெளிநாட்டு விளையாட்டாளர்கள் நாட்டின் விளையாட்டுத் துறைக்குப் பங்களிப்பை வழங்கும் திறனைக் கொண்டிருந்தாலும், சம்பந்தப்பட்ட விளையாட்டாளர் குறிப்பிட்ட தேவையைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், அவரின் குடியுரிமை விண்ணப்பம் பரிசீலிக்கப்படாது என்று அவர் விளக்கினார்.
வெளிநாட்டு காற்பந்து விளையாட்டாளர்களுக்கு மலேசியக் குடியுரிமை வழங்கும் செயல்முறை குறித்து செனட்டர் டத்தோ சலேஹுடின் சைடின் எழுப்பிய கேள்விக்கு டாக்டர் ஷம்சுல் பதிலளித்தார்.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews