கோலாலம்பூர், 19/03/2025 : மருத்துவச் செலவு பணவீக்கத்தில் தொடர்ச்சியான அதிகரிப்பைத் தொடர்ந்து, மலேசியாவில் மருத்துவம், சுகாதார காப்புறுதி மற்றும் TAKAFUL, M-H-I-T திட்டங்களும் அதிகரிப்பதால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கும் இடைக்கால நடவடிக்கைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மக்களின் நிதிச் சுமையில் ஏற்படும் உடனடி தாக்கத்தைக் குறைப்பதும், அமலாக்கத் தரப்பினர் இப்பிரச்சனையைத் தீர்க்க வாய்ப்பளிப்பதும், அந்த தற்காலிக நடவடிக்கையின் நோக்கமாகும் என்று நிதி துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் கூறினார்.
”2025-ஆம் ஆண்டு உலகளாவிய மருத்துவப் போக்கு விகித அறிக்கையின்படி, மலேசியாவில் மருத்துவச் செலவு பணவீக்கம் 2024-ஆம் ஆண்டில் 15% ஐ எட்டும். இந்த எண்ணிக்கை, உலக சராசரி மற்றும் ஆசிய பசிபிக் சராசரியான 10% ஐ விட அதிகமாகும். இந்த அதிகரிப்பு மருத்துவ தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் தொற்றா நோய்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் உந்தப்படுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
மக்களின் சுமையை அதிகரிக்கும், சுகாதார காப்புறுதி செலவை நிவர்த்தி செய்வதற்கு, அரசாங்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, செனட்டர் டான் ஶ்ரீ முஹமட் ஃபாட்மி இன்று மேலவையில் எழுப்பிய கேள்விக்கு லிம் அவ்வாறு பதிலளித்தார்.
இப்பிரச்சனையை விரிவாகக் கையாள, அரசாங்கம் ஐந்து முக்கிய அம்ச சீர்திருத்தங்களைத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews