போதைப்பொருள் தயாரிக்கும் மூன்று ஆய்வகங்களின் நடவடிக்கைகள் முறியடிப்பு

போதைப்பொருள் தயாரிக்கும் மூன்று ஆய்வகங்களின் நடவடிக்கைகள் முறியடிப்பு

இஸ்கண்டார் புத்ரி, 18/03/2025 : கடந்த மார்ச் 6 தொடங்கி 11ஆம் தேதி வரை இஸ்கண்டார் புத்ரி மற்றும் ஶ்ரீ அலாமில் மேற்கொள்ளப்பட்ட ஐந்து சோதனை நடவடிக்கைகளில் போதைப்பொருள் தயாரிக்கும் மூன்று ஆய்வகங்களின் நடவடிக்கையை போலீசார் முறியடித்தனர்.

அதோடு, ஒரு கோடியே 44 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் பறிமுதல் மதிப்பை உட்படுத்தி, ஏழு ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பல்வகை பொருள்களும் உபகரணங்களும் வைக்கப்பட்ட தொழிற்சாலை ஒன்றும், ஜோகூர் பாருவில் உள்ள தொழில்துறை பகுதியில், கண்டறியப்பட்டது.

கைது செய்யப்பட்ட ஏழு ஆடவர்களில், 25 லிருந்து 40 வயதுடைய ஐந்து உள்நாட்டினரும் இரண்டு தைவான் நாட்டினரும் அடங்குவர் என்று ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.

”இக்குழு வேலிகொண்ட வீடுகளை ஆய்வகங்களாக பயன்படுத்துகின்றது. தொழிற்சாலை வேறொரு இடத்தில் உள்ளது. 2004ஆம் ஆண்டு ஜூலையில் இக்குழு செயல்பட்டது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆய்வகங்கள் அதற்கடுத்த மாதங்களில் என்று நான் நம்புகிறேன்,” என்றார் அவர்.

மொத்தமாக, 42.5 கிலோகிராம் மெத்திலீன் டையாக்ஸிமெத்தாம்பேட்டமைன்,  எம்.டி.எம்.ஏ-வும் 182.8 கிலோகிராம் ஷாபு வகை போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பல்வேறு பொருள்கள் மற்றும் இயந்திரங்கள் உட்பட மூன்று கார்கள், ஒரு லாரி, பல்வகை நகைகள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

1952ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டம் செக்‌ஷன் 39B மற்றும் 1952ஆம் ஆண்டு நஞ்சு சட்டம் செக்‌ஷன் 30(3)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

Source : Bernama

#Drugs
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews