கப்பாளா பத்தாஸ், 18/03/2025 : கடந்த சனிக்கிழமை, பினாங்கில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில், 5 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான 150 கிலோகிராம் கஞ்சா வகைப் பொருள் மற்றும் ஒரு கிலோகிராம் கஞ்சா பூவும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதோடு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் இருவரை போலீசார் கைது செய்ததாக புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறை, ஜே.எஸ்.ஜே.என் இடைக்கால இயக்குநர், டிசிபி மாட் ஸானி @ முஹமட் சலாஹுடின் செ அலி தெரிவித்தார்.
அந்த நடவடிக்கையின்போது, சிக் சாவர் ரக துப்பாக்கி, இரண்டு காலி தோட்டாக்கள் மற்றும் மூன்று கைவிலங்குகளும் கைப்பற்றப்பட்டதாக டிசிபி மாட் ஸானி கூறினார்.
காலை மணி 9.20-க்கு, தெற்கு நோக்கிச் செல்லும் சுங்கை டூவா டோல் சாவடி அருகே நடத்தப்பட்ட சோதனையின்போது, 46 வயதான உள்நாட்டைச் சேர்ந்த ஆடவர் செலுத்தியக் காரை, ஜே.எஸ்.ஜே.என் தடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
‘கஞ்சா என்று நம்பப்படும் 146 துண்டுகள் கொண்ட 7 சாக்குகளை நாங்கள் கண்டுபிடித்தோம். மேலும், வாகனத்தின் பின்புறத்திலும், வாகனத்தின் பின் இருக்கையிலும் 5 சிறிய கஞ்சா பூக்கள் பொட்டலங்களும் கண்டுபிடிக்கப்பட்டன,” என்றார் அவர்.
போலீஸ் வாகனத்தை மோதி, அங்கிருந்த தப்பிக்க அந்த நபர் முயற்சித்ததாகவும், இறுதியில் கைது செய்யப்பட்டதாகவும் மாட் ஸானி தெரிவித்தார்.
இதனிடையே, ஜூரு டோல் சாவடி அருகே, 24 வயதான இரண்டாவது நபரை போலீஸ் கைது செய்தனர்.
“sweeper”-ஆக செயல்படும் அந்நபர், போதைப் பொருளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பாதைகளைக் கண்காணித்து, போலீசார் நடமாட்டம் இல்லாததை உறுதிப்படுத்துவதாக அவர் மேலும் கூறினார்.
கஞ்சா வகை போதைப் பொருள் அனைத்து, தாய்லாந்தில் இருந்து கடத்தப்பட்டு, கிள்ளான் பள்ளத்தாக்கில் விநியோகிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட அவ்விரு நபர்களும் மார்ச் 22-ஆம் தேதி வரையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Source : Bernama
#Drugs
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews