மெட்மலேசியா: சவராக்கில் தொடர் மழை எச்சரிக்கை

மெட்மலேசியா: சவராக்கில் தொடர் மழை எச்சரிக்கை

கோலாலம்பூர், 18/03/2025 : மார்ச் 20-ஆம் தேதிவரை, சரவாக்கின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தத் தொடர் மழையால், கூச்சிங், செரியான், சமரஹான், ஶ்ரீ அமான், பெதோங், சரிக்கே, சிபு, மூகா, காபிட் மற்றும் பிந்துலு ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும் என்று மெட்மலேசியா தலைமை இயக்குநர் முஹமட் ஹிஷாம் முஹமட் அனிப் கூறியுள்ளார்.

மார்ச் 20 தொடங்கி 21-ஆம் தேதி வரை தீபகற்பத்தின் பகாங், ஜோகூர் மற்றும் சபாவில் உள்ள பகுதிகளிலும், தொடர் மழைக்கான எச்சரிக்கையை மெட்மலேசியா வெளியிட்டுள்ளது.

பகாங்கில், குவாந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின், அதேபோல ஜோகூரில் குளுவாங், மெர்சிங், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகிய இடங்கள் மழையால் பாதிக்கப்படும் பட்டியலில் உள்ளன.

இதனிடையே, சபாவில், மேற்கு கடற்கரை பகுதிகளான ரனாவ் மற்றும் கோட்டா பெலுட், சண்டகனில் தெலுபிட் மற்றும் கினாபத்தாங்கன் போன்ற பகுதிகளிலும் தொடர் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Source : Bernama

#MetMalaysia
#Sarawak
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews