கோலாலம்பூர் 18/03/2025 : எஞ்சிய அல்லது நிலுவையில் உள்ள வரி கட்டணத்தை e-Ansuran மூலம் இணையம் வழி, தவணை முறையில் செலுத்துவதற்கான விண்ணப்பத்தை மார்ச் மாதம் 5-ஆம் தேதி முதல் MyTax செய்தி தளம் மூலம் மேற்கொள்ளலாம்.
வரி செலுத்துபவர்கள், எஞ்சிய அல்லது நிலுவையில் உள்ள வரியைச் செலுத்துவதற்கு எளிதாக விண்ணப்பிக்க இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருமான வரி வாரியம், எல்.எச்.டி.என் குறிப்பிட்டுள்ளது.
மேலும், எந்தவொரு கூடுதல் ஆவணங்களும் இல்லாமல் தானியங்கி முறையில் அனுமதி பெறவும் இந்நடவடிக்கை உதவுகிறது.
விண்ணப்பிக்கும் மொத்த தொகை 300 ரிங்கிட்டிற்கும் மேல் இருக்க வேண்டும்.
அதோடு, மொத்த தவணை இரண்டில் இருந்து ஆறு முறை மட்டுமே போன்றவை வரி செலுத்துபவர்கள், e-Ansuran விண்ணப்பிப்பதற்கான தகுதிகளில் அடங்கும்.
வரி செலுத்துபவர்கள் https://mytax.hasil.gov.my/ என்ற MyTax அகப்பக்கத்தில் அதற்கான விண்ணப்பத்தைச் செய்யலாம்.
அதோடு, e-Ansuran விண்ணப்பத்தை ரத்து செய்வதென்றால், அதை எல்.எச்.டி.என் அலுவலகத்தில் மட்டுமே மேற்கொள்ள முடியும்.
Source : Bernama
#LHDN
#EAnsuran
#myTax
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews