இஸ்மாயில் சப்ரியின் வழக்கு; அனைத்தையும் எஸ்.பி.ஆர்.எம் விசாரிக்கும்

இஸ்மாயில் சப்ரியின் வழக்கு; அனைத்தையும் எஸ்.பி.ஆர்.எம் விசாரிக்கும்

ஷா ஆலம், 18/03/2025 : முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையில் தொடர்புடைய எந்தவொரு தகவலையும் விசாரிப்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம். தமது உத்தரவாதத்தையும் கடப்பாட்டையும் வழங்கியுள்ளது.

ஊழல், அதிகார துஷ்பிரயோகம், நிதி மோசடி மற்றும் 17 கோடியே 70 லட்சம் ரிங்கிட் ரொக்கப் பணமும் தங்க கட்டிகளும் கண்டெடுக்கப்பட்டதோடு மட்டும், தமது தரப்பின் விசாரணை நின்றுவிடாது என்று எஸ்.பி.ஆர்.எம். தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி உறுதியளித்தார்.

”இவை அனைத்தும் நாம் விசாரிக்க வேண்டிய விவகாரங்கள். அவர் பதிலளிக்க வேண்டும். எனவே, நேரம் எப்போது வரும் என்று தெரியவில்லை, புதிய பிரச்சனைகள் எழுந்தாலும் அல்லது இப்போதே எழுந்தாலும், எஸ்.பி.ஆர்.எம் தொடர்ந்து விசாரணையை மேற்கொள்ளும் என்று உத்தரவாதம் அளிக்கிறேன்,” என்றார் அவர்.

திங்கட்கிழமை சிலாங்கூர், ஷா ஆலமில் உள்ள யு.ஐ.டி.எம் பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டப் பின்னர், செய்தியாளர்களிடம் அசாம் பாக்கி அவ்வாறு கூறினார்.

இவ்வழக்கு தொடர்பில், ஒன்பதாவது பிரதமரான இஸ்மாயில் சப்ரியிடம் கேட்கப்பட வேண்டிய மற்றும் அவர் பதிலளிக்க வேண்டிய பல விஷயங்கள் இன்னும் இருப்பதால், வாக்குமூலம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

Source : Bernama

#IsmailSabri
#SPRM
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews