புத்ராஜெயா, 18/03/2025 : ஊழல் மற்றும் கள்ளப்பண பரிமாற்ற வழக்கு விசாரணை தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோபின் வாக்குமூலப் பதிவு, நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஒத்திவைப்பிற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
இன்று ஐந்தாவது முறையாக இஸ்மாயில் சப்ரி வாக்குமூலம் அளிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம்-இற்கு வருவதாக நேற்று கூறப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, காலை மணி 9 முதல் ஊடகவியலாளர்கள் புத்ராஜெயா எஸ்.பி.ஆர்.எம் வளாகத்தின் வெளியில் கூடியிருந்தனர்.
ஆனால், ஒன்பதாவது பிரதமரான இஸ்மாயில் சப்ரியின் வாக்குமூலப் பதிவு புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
வாக்குமூலப் பதிவின் நேரத்தையும் எஸ்.பி.ஆர்.எம் இன்னும் நிர்ணயிக்கவில்லை.
பெரா நாடாளுமன்ற உறுப்பினரான இஸ்மாயில் சப்ரியிடம் நேற்று, எஸ்.பி.ஆர்.எம் ஏழு மணி நேரம் வாக்குமூலப் பதிவு செய்தது.
கடந்தாண்டு டிசம்பர் 11-ஆம் தேதி தமது சொத்துக்களை அறிவிக்க உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்மாயில் சப்ரி மீது எஸ்.பி.ஆர்.எம் விசாரணையைத் தொடங்கியது.
2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2022-ஆம் ஆண்டு நவம்பர் வரையில், அவரது நிர்வாகத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மலேசிய குடும்பம் திட்டத்தின் விளம்பரச் செலவு தொடர்பில், ஊழல் மற்றும் கள்ளப்பண பறிமாற்ற வழக்கில் இஸ்மாயில் சப்ரி விசாரிக்கப்பட்டு வருகிறார்.
Source : Bernama
#IsmailSabri
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews