ஷா ஆலாம், 17/03/2025 : இன்று முதல் அமல்படுத்தப்பட்டிருக்கும் கணினி முறையிலான வாகனப் பரிசோதனை மையம் புஸ்பகோமில் சுய அறிவிப்பு முன்முயற்சி, வணிக வாகனங்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்காத ஐந்து வகையான பரிசோதனைகளை உள்ளடக்கியுள்ளது.
கடந்த மார்ச் 11-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட அந்த முன்முயற்சியில் வாகன வெளியுறத்தில் உள்ள அடையாளங்கள், வேக வரம்பு அடையாளம், அவசர உதவிப் பெட்டி, பதிவு எண் மற்றும் பொது சேவை வாகனங்களுக்கான பயணிகள் இருக்கையின் நிலை ஆகிவற்றை உள்ளடக்கி இருப்பதாக சாலைப் போக்குவரத்து துறை ஜேபிஜே தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லிதெரிவித்தார்.
இந்த முன்முயற்சியின் வழியாக சோதனை நேரம் குறைவதோடு முக்கியமற்ற காரணங்களால் ஏற்படும் சோதனை தோல்வியையும் குறைக்கலாம்.
அதோடு, அமலாக்க தேதிக்கு முன்னர், ஐந்து வகையான பரிசோதனையில் தோல்வியடையும் எந்தவொரு வாகனமும் இன்று முதல் இணையம் வழியாக புஸ்பகோமில் மறு பரிசோதனையை மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
ஐந்து வகையான பரிசோதனையில் தோல்வியடையும் வாகனங்களுக்கு மட்டுமே இந்த தளர்வு வழங்கப்படுகிறது.
“ஒவ்வொரு வாகனமும், இன்னும் 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் அதன் கீழ் உள்ள விதிகளுக்கு முழுமையாக இணங்க வேண்டும். ஜேபிஜே மற்றும் பிற அமலாக்க நிறுவனங்கள் செயல்படுத்தப்படும் விதிகளில் அந்த ஐந்து வகையான சோதனைகளும் அடங்கும்,” என்றார் அவர்.
இன்று, ஷா ஆலம், செக்ஷன் 28-இல் உள்ள புஸ்பகோம் செயல்பாடுகளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியஏடி ஃபட்லி ரம்லி அதனைத் தெரிவித்தார்.
Source : Bernama
#Puspakom
#CommercialVehicleInspection
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews