புஸ்பாகோமில் சோதனைக்கான வருகை முன்பதிவு செய்ய இடைத்தரகர்களுக்கு 750 ரிங்கிட்

புஸ்பாகோமில் சோதனைக்கான வருகை முன்பதிவு செய்ய இடைத்தரகர்களுக்கு 750 ரிங்கிட்

ஷா ஆலாம், 17/03/2025 : கணினி முறையிலான வாகனப் பரிசோதனை மையம் புஸ்பாகோமில்  சோதனைக்கான வருகை முன்பதிவை விற்பனை செய்வதன் வழியாக இடைத்தரகர்கள், 750 ரிங்கிட் வரையில் இலாபம் ஈட்டுவது அம்பலமாகியுள்ளது.

ஒரே வாகன சேசிஸ் எண்ணைப் பயன்படுத்தி வெவ்வேறு வாகனப் பதிவு எண்களைக் கொண்டு அதிகமான வருகை முன்பதிவைப் பெறுவதே அந்த இடைத்தரகர்கள் பயன்படுத்தும் உத்திகள் என்று  புஸ்பாகோம் தலைமை நிர்வாக அதிகாரி மாஹ்முட் ரசாக் பஹ்மான் தெரிவித்தார்.

புஸ்பாகோமில், சோதனைக்கான வருகை முன்பதிவிற்கு மூன்று ரிங்கிட் 50 சென் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வேளையில் தங்களின் உத்திகள் வழியாக,  இடைத்தரகர்கள் அதை 750 ரிங்கிட் வரைக்கும் விற்பனை செய்வதாக அவர் கூறினார்.

“சாலைப் போக்குவரத்துத் துறை துணையுடன் அதை நாங்கள் இன்னும் விசாரித்து வருகிறோம். யார்? ஏன் அதைச் செய்கிறார்கள் மற்றும் எதற்காக இடைத்தரகர்களை அழைக்கிறார்கள் என்பதை நாங்கள் கவனித்து வருகிறோம்,” என்றார் அவர்.

இடைத்தரகர்ள் லாபம் ஈட்டுவதை தடுப்பதற்காக கணினி முறையிலான வாகனப் பரிசோதனை மையம் புஸ்பாகோமில் இரட்டை முன்பதிவு இனி அனுமதிக்கப்பட்டாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் முன்னதாக அறிவித்திருந்தார்.

Source : Bernama

#Puspakom
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews