பி.டி.பி.டி.என் கடனைத் திருப்பிச் செலுத்துவதை அதிகரிக்க நடவடிக்கை

பி.டி.பி.டி.என் கடனைத் திருப்பிச் செலுத்துவதை அதிகரிக்க நடவடிக்கை

புத்ராஜெயா, 17/03/2025 : தேசிய உயர்கல்வி கடனுதவி திட்டம், பி.டி.பி.டி.என்-இன் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை அதிகரிக்க பயணக் கட்டுப்பாடு அணுகுமுறையை மட்டும் அரசாங்கம் பரிசீலிக்கவில்லை.

பயணக் கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றாலும், பி.டி.பி.டி.என் கடனை வசூலிப்பதற்கான அணுகுமுறைகளை அரசாங்கம் முழுமையாக ஆராய்வதாக உயர்க்கல்வி அமைச்சர்  டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர்  தெரிவித்தார்.

“இதுவரை 21 லட்சம் கடிதங்கள் மற்றும் பணம் செலுத்துமாறு அவர்களுக்குத் தெரிவிக்கும் தகவல்களை அனுப்பியுள்ளோம். கடனைத் திருப்பிச் செலுத்தும் அடிப்படையில் அதிகரிப்பைக் காண்கிறோம்,” என்றார் அவர்.

வெளிநாடுகளுக்கு செல்லும் பி.டி.பி.டி.என் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து அரசாங்கம் இன்னும் பரிசீலித்து வருகிறதா என்ற கேள்விக்கு டாக்டர் சம்ரி  அவ்வாறு பதிலளித்தார்.

Source : Bernama

#Entamizh
#PTPTN
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews