கோலாலம்பூர், 17 /03/2025 : மலேசியாவின் ஆசியானுக்கான தலைமைத்துவ பதவி, விளையாட்டு உட்பட அனைத்து துறைகளிலும் பொறுப்பேற்பு மற்றும் நீதிக்கான அணுகலை முதன்மைப்படுத்தும் வட்டாரக் கொள்கைகளை வடிவமைக்கும் தனித்துவமான வாய்ப்பை நாட்டிற்கு வழங்கியிருக்கிறது.
விளையாட்டுகளில் நீதிக்கு சமமான அணுகலை உறுதி செய்வதில் மாற்று விவாதத் தீர்வுமுறை ADR முக்கிய பங்கு வகிக்கும் என்றும் சட்டம் மற்றும் கழகச் சீர்த்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சாயிட் தெரிவித்தார்.
மே மாதத்தில் நடைபெறவிருக்கும் 2025-ஆம் ஆண்டு ஆசியான் விளையாட்டு ADR மன்றக் கலந்துரையாடலில் விளையாட்டு விவாதத் தீர்வுமுறையை மேம்படுத்த மலேசியா தயாராக இருப்பதாகவும் அசாலினா கூறினார்.
“இதை நிறைவேற்றும் நமது திறனை, ஆசியான் அமைச்சர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். மேலும், ஆசியான் முழுவதும் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்களுடனும் இணைந்து இதைச் செய்ய முடியும் என்றும், ஆசியான் நாடுகளின் மற்ற அனைத்து சர்ச்சைகளுக்கும் மலேசியாவை மையமாக மாற்ற முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்றார் அவர்.
இவ்வாண்டின் ஆசியான் விளையாட்டு ADR மன்றக் கலந்துரையாடலின் கருப்பொருளான, ”Ensuring Fair Play: Advancing Sports Dispute Resolution in Asia” விளையாட்டுகளில் நியாயம் மற்றும் நீதிக்கான அணுகலின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாக அதன் தொடக்க விழாவில் உரையாற்றியபோது அசாலினா, தெரிவித்தார்.
அந்நிகழ்ச்சியில், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோவும் கலந்து கொண்டார்.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews