நீதித்துறை சம்பந்தப்பட்ட எந்த முடிவிலும் தலையிடுவதில்லை – பிரதமர் மீண்டும் நிலைநிறுத்தல்

நீதித்துறை சம்பந்தப்பட்ட எந்த முடிவிலும் தலையிடுவதில்லை - பிரதமர் மீண்டும் நிலைநிறுத்தல்

ஷா ஆலம், 16/03/2025 : வழக்கறிஞர் மன்றம் நேற்று செய்த தீர்மானம் குறித்து கருத்துரைத்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், ​​நீதித்துறை சம்பந்தப்பட்ட எந்த முடிவிலும் தலையிடுவதில்லை என்ற அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

இருப்பினும், சட்டமன்றத்திற்கு நியமிக்கப்படுபவர்கள் அதிகாரம் மிக்கவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும், வணிகம் மற்றும் ஊழல் போன்றவற்றில் சிக்காமல் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்பதையும் அவர் கோடிகாட்டினார்.

”நாம் எதைத் தொடங்குவது? முடிவெடுப்பதில் நீதித்துறையின் விவகாரங்களில் தலையிட வேண்டாம். ஆனால் நியமிக்கப்பட்டவர்கள் போதுமான அதிகாரம் மிக்கவர்கள், சுதந்திரமானவர்கள் மற்றும் வணிக நலன்கள் மற்றும் ஊழலில் சிக்காதவர்கள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். இது அரசாங்கத்தில் எங்களின் பொறுப்பாகும். ஏனெனில் நாடாளுமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது. காரணம் நாங்கள் மக்களுக்கு பதிலளிக்க வேண்டும்,” என்றார் அவர்.

மேலும் பேசிய பிரதமர், உயர் அதிகாரிகள் உட்பட நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் எந்தவொரு வழக்குகளிலும் அரசாங்கம் இதுவரை தலையிட்டதில்லை என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

நீதி பரிபாலனத் துறை நியாயமாகவும் நேர்மையாகவும் இருப்பதை உறுதிச் செய்ய சுயேட்சை அமைப்புகள் அதன் மீது கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.

Source : Bernama

#PMAnwar
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews