மின்னணு கழிவு கொள்கலன்களில் சுங்கத்துறை சோதனை

மின்னணு கழிவு கொள்கலன்களில் சுங்கத்துறை சோதனை

கோலாலம்பூர், 16/03/2025 : கடந்தாண்டு மேற்கு துறைமுகத்தில், e-waste எனப்படும் மின்னணு கழிவுகள் உட்பட14 லட்சத்து 20,000 இறக்குமதி கொள்கலன்களை, ஐந்து உயர் திறன் scan எனும் வருடி இயந்திரங்களைக் கொண்டு அரச மலேசிய சுங்கத் துறை, ஜே.கே.டி.எம் பரிசோதனை செய்திருந்தது.

இதன் மூலம் துறைமுகத்தின் உள்ளே நுழையும் கொள்கலன்களை 100 விழுக்காடு முழுமையாகப் பரிசோதனை செய்யும் அத்துறையின் ஆற்றல் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சராசரியாக நாளொன்றுக்கு 5,000 கொள்கலன்கள் இறக்குமதி அனுமதி நோக்கத்திற்காக scan செய்யப்படுகின்றன.

அதேவேளையில், பெரும்பாலான கொள்கலன்கள் கப்பல் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், எஞ்சியவை இறக்குமதியாளரின் செயல்முறைக்காக காத்திருக்கும் தருவாயில் கொள்கலன் பகுதியில் இருப்பதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல கொள்கலன்களின் மேற்கொள்ளப்பட்ட scan சோதனையின் அடிப்படையில், தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்வதாக சந்தேகிக்கப்படும் கொள்கலன்களிலும் முழுமையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ஒவ்வொரு கொள்கலன் போக்குவரத்து பாதையிலும் கண்காணிப்பு நோக்கத்திற்காக மறைக்காணி பொருத்தப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் துறை, ஜே.ஏ.எஸ்-உடன் இணைந்து ஜே.கே.டி.எம் மின்னணு கழிவுகள் வர்த்தகத்தின் ஆய்வுகளை நேரடியாக மேற்கொண்டது.

அதேவேளையில், skrap வர்த்தக ஆய்வுகள், மலேசிய தரநிலைகள் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் SIRIM-உடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

Source : Bernama

#Entamizh
#eWaste
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews