சுங்கை பூலோ, 16/03/2025 : நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மலேசிய கூட்டுறவு ஆணையம் மடானி ராயா விற்பனைத் திட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அதில், சிலாங்கூர், சுங்கை பூலோ, சௌஜானா உத்தாமா எம்.பி.கே.எஸ் மண்டபத்தில் இரு நாள்கள் நடத்தப்பட்ட விற்பனைத் திட்டம், நோன்புப் பெருநாள் கொண்டாடும் மக்களின் முன்னேற்பாடு செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மடானி ராயா விற்பனைத் திட்டத்தை, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சரும், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று நிறைவுச் செய்து வைத்தார்.
உள்ளூர் கூட்டுறவு சங்கங்கள் உட்பட பத்து விற்பனையாளர்கள் அளித்த ஒத்துழைப்பின் அடிப்படையில், அரிசி, சமையல் எண்ணெய், கோழி, இறைச்சி, உறைந்த மற்றும் உலர்ந்த உணவுகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள், நேற்று தொடங்கி நடைபெற்ற இந்த விற்பனைத் திட்டத்தில் விற்கப்பட்டன.
இதனிடையே, மற்ற இடங்களில் இந்த ‘happy hour’ நேரத்தின்போது 30 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் நிலையில், சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் தாம் கூடுதலாக 20 விழுக்காட்டு தள்ளுபடியை வழங்குவதால், ஒட்டுமொத்தமாக 50 விழுக்காட்டு கழிவை அத்தொகுதி மக்கள் பெறுவதாக ரமணன் தெரிவித்தார்.
அதேவேளையில், இந்த விற்பனைத் திட்டம் அடுத்த வாரம் பாயா ஜாராஸ் மற்றும் கோத்தா டமன்சாரா ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளிலும் தொடரப்படும் என்றும் ரமணன் குறிப்பிட்டார்.
Source : Bernama
#RayaSales
#Ramanan
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews