கூச்சிங், 16/03/2025 : e-Kasih உதவி பெறுபவர்களின் பட்டியலை புதுப்பிப்பதற்கான சரவாக்கின் நடவடிக்கை, மாநில மக்களின் நல்வாழ்விற்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
e-Kasih உதவி தமது அமைச்சின் அதிகார வரம்பிற்கு கீழ் இல்லை என்றாலும், மறு பட்டியல் செய்வது அவசியமாகும்.
ஏனெனில், வறிய நிலையைச் சேர்ந்தவர்கள் அப்பிரிவில் இல்லாவிடினும், உதவி தேவைப்படுவோர், அப்பட்டியலில் இணைத்து கொள்ளப்படுவார்கள் என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி தெரிவித்தார்.
”மக்களைப் பற்றிய தவறான பார்வையை இது ஏற்படுத்துவதால், நாங்கள் அதை விரும்பவில்லை. ஆனால் இந்த நிலைமையை மேம்படுத்த அரசாங்கம் எப்போதும் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது,” என்றார் அவர்.
ஏழைகள் அற்ற நாடு என்ற மலேசியாவை உருமாற்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் இலக்கிற்கு ஏற்ப, மத்திய அல்லது மாநில அரசாங்க அளவில், இப்பிரச்சனை உடனடியாகத் தீர்க்கப்படும் என்று தாம் நம்பிக்கைக் கொண்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி கூறினார்.
இன்று கூச்சிங்கில், பிகேமா அறவாரியத்துடனான Juh Shopping என்ற நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் அதனைக் குறிப்பிட்டார்.
Source : Bernama
#EKaish
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews