உயரிய விருதுகளைப் பெறுவதற்கான நிபந்தனைகளை ஜசெக தளர்த்தும்

உயரிய விருதுகளைப் பெறுவதற்கான நிபந்தனைகளை ஜசெக தளர்த்தும்

ஷா ஆலாம், 16/03/2025 : ஜ.செ.க உறுப்பினர்கள், சுல்தான் அல்லது மாநில ஆளுநர்களிடம் இருந்து விருதுகளைப் பெறுவதற்கு ஏதுவாக அக்கட்சி விருது அல்லது பட்டங்கள் பெறும் விதிமுறைகளில் சில தளர்வுகளை ஏற்படுத்தவுள்ளது.

அக்கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் , சுல்தான் அல்லது மாநில ஆளுநர்களிடம் இருந்து நேரடியாக விருதுகளுக்கான முன்மொழிவைப் பெறுவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

”டத்தோ உள்ளிட்ட இதர உயரிய விருதுகளைப் பெறும் கொள்கையினைக் கொண்டிருக்க வேண்டாம் என்று ஜசெக உறுப்பினர்களுக்கு இதற்கு முன்னர் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால்மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களில் ஏறக்குறைய 17 ஆண்டுகள் நிலைத்திருப்பதைத் தொடர்ந்து, இந்த நிபந்தனைகள் மற்றும் கொள்கைகளை நாங்கள் திரும்பிப் பார்க்கிறோம். ஏனெனில் சுல்தான் தாமே முன்வந்து ஜசெக பிரதிநிதிகளுக்கு ‘டத்தோ’ பட்டத்தை வழங்க விரும்புகிறார் என்றால் அந்த நேரத்திலும் நாம் விதிமுறையை கடுமைப்படுத்த முடியாது,”

இருப்பினும், கௌரவப் பட்டத்தின் ஒவ்வொரு சலுகைக்கான நிபந்தனைகளையும் மத்திய செயற்குழு தீர்மானிக்கும் என்றும் லோக் கூறினார்.

Source : Bernama

#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews