மடானி அரசாங்கத்தின் வலிமைக்கு ஜசெக முக்கிய பங்கு வகிக்கும்

மடானி அரசாங்கத்தின் வலிமைக்கு ஜசெக முக்கிய பங்கு வகிக்கும்

ஷா ஆலாம், 16/03/2025 : பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமைத்துவத்தின் கீழ், நாடு தற்போது சரியான பாதையில் பயணித்து வருவதால், மடானி அரசாங்கத்தின் வலிமைக்கு ஜசெகவும் தனது முக்கிய பங்கை வகிக்கின்றது.

கடந்த 1966ஆம் ஆண்டு ஜனநாயக செயல்கட்சி தோற்றுவிக்கப்பட்டது முதல், அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படுவதற்கு அது முக்கிய பங்களித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கூறியுள்ளார்.

அதோடு, தற்போதைய அரசாங்கத்தின் ஒரு வியூகப் பங்காளியாகவும் மலேசிய அரசியல் நிலைத்தன்மைக்கு அது தொடர்ந்து கடமையாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த மாற்றமானது, அரசியல் அரங்கில் ஜசெகவின் முதிர்ச்சியைக் காட்டுவதோடு நிலையான மற்றும் அனைவருக்குமான அரசாங்கத்தை அமைப்பதற்கான அவர்களின் அர்ப்பணிப்பு குணத்தையும் வெளிப்படுத்துவதாக அந்தோணி லோக் கருத்துரைத்தார்.

மேலும், ஒரு துணிச்சலான கட்சியாக செயல்படும் ஜசெக, மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அதேவேளையில், அரசாங்க நிர்வாகத்தில் உள்ள அநீதியையும் தைரியமாக விமர்சிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

”குரல் எழுப்புவதற்காக ஜசெக ஒருபோதும் பயந்ததில்லை. முழு பொறுப்புணர்வுடன் அது தனது பங்களிப்பை செலுத்தி வருகிறது. ஜசெகவின் தலைவர்கள் வெறும் அரசியல் தலைவர்கள் அல்லர். அவர்கள் நாட்டின் தலைவர்களாகவும் செயல்படுகின்றனர். நாங்கள் வெறும் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மாறாக தேசத்தைக் கட்டியெழுப்புபவர்களாக இருக்க விரும்புகிறோம்,” என்றார் அவர்.

மற்றுமொரு நிலவரத்தில், மடானி அரசாங்கத்துடனான பயணம் குறித்து லோக், கருத்துரைத்திருந்தார்.

அதில், 2022-ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற 28 மாதங்களில், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புரிந்துள்ள சாதனைகளையும் அவர் பாராட்டிப் பேசினார்.

Source : Bernama

#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews