கோலாலம்பூர், 15/03/2025 : நகரப் புதுப்பித்தல் சட்ட மசோதாவை எதிர்த்து போராடுவதற்கான எந்தவொரு கூட்டங்களையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று அனைத்து தரப்பினருக்கும் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இம்முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், தவறான கருத்துக்களை வெளியிட்டுள்ளதோடு, மலாய்க்காரர்களுக்கு துரோகம் இழைத்திருப்பதாகவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
”நான் அவர்களிடம் சொல்ல விரும்புகிறேன். எங்களுக்கு சவால் விடுக்காதீர்கள். ஏழைகளின் நிலைமையை பாதுகாக்க விரும்பினால், பெரும்பான்மையான மலாய்க்காரர்கள் இந்தியர்களில் ஒரு சிறிய பகுதியினர், ஒரு சில சீனர்களும் உள்ளனர். நீங்கள் அவர்களுக்கு இடையூறு கொடுக்க விரும்பினால், ஒரு பேரணியை நடத்த விரும்பினால், மலாய்க்காரர்களின் நிலையைப் பாதுகாக்க ஓர் அரங்கில் அதனை நடத்தலாம்,” என்றார் அவர்.
கோலாலம்பூரில், சனிக்கிழமை நடைபெற்ற மாரா மடானி வாக்காஃப் தொடக்க விழாவில் உரையாற்றும்போது டத்தோ ஶ்ரீ அன்வார் அவ்வாறு கூறினார்.
நீண்ட காலமாக பழமையான மற்றும் பாழடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஏழை மக்களின் நிலையை இன வேறுபாடின்றி பாதுகாப்பதே இந்த மசோதாவை உருவாக்கும் முயற்சியின் நோக்கமாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
அதேவேளையில், மறுசீரமைப்பு முயற்சியை எதிர்த்த பல தரப்பின் அணுகுமுறையையும், குறிப்பாக மலாய் மற்றும் இஸ்லாமிய கட்சிகளின் பெயர்களைப் பயன்படுத்தியவர்களின் அணுகுமுறையையும் பிரதமர் சாடினார்.
Source : Bernama
#PMAnwar
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews