சிரம்பான், 15/03/2025 : ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தேசிய முன்னணியின் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அறுவர் தங்களுக்கென ஆற்றலையும் வலுவையும் கொண்டுள்ளனர்.
வேட்பாளரை நிர்ணயிப்பதற்கு முன்னதாக, தேசிய முன்னணியின் அத்தொகுதியைத் தற்காத்துக் கொள்ளும் வகையில் பொதுமக்களின் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.
”ஒவ்வொருவருக்கும் தனி பலம் உள்ளது. கட்சி நிர்வாகம், நான் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒவ்வொரு வேட்பாளர் குறித்தும் துல்லியமாக ஆராய்வோம். அவர்களின் பலம் மற்றும் உளவுத்துறை மூலம் ஆராய்வோம். பொதுமக்களின் கருத்தும் கேட்டறியப்படும். இம்முறை வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வேட்பாளர் பெயரை வெளியிடுவோம்,” என்றார் அவர்.
கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி, பினாங்கு, பண்டாராயா அரங்கில் காற்பந்தாட்டத்தின் போது, ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினரான 59 வயது இஷாம் ஷாருதீன் காலமானதை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
Source : Bernama
#AyarKuning
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews