தீ விபத்தில் சிக்கி முதியவர் கருகி மாண்டார்

தீ விபத்தில் சிக்கி முதியவர் கருகி மாண்டார்

ஜோகூர் பாரு, 15/03/2025 : ஜோகூர், தாமான் பெர்மாஸ் ஜெயாவில் உள்ள மூன்று வரிசை வீடுகளை உட்படுத்தி ஏற்பட்ட தீ விபத்தில், முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் நால்வர் காப்பாற்றப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் நேற்று நள்ளிரவு மணி 12.13-க்கு கிடைத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, பாசிர் கூடாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம், BBP உட்பட, மவுண்ட் ஆஸ்டின் தன்னார்வ தீயணைப்பு படையைச் சேர்ந்த 33 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, ஜோகூர் ஜெயா BBP-இன் தீயணைப்பு இரண்டாவது மூத்த அமலாக்க அதிகாரி சைஃபுல்பஹ்ரி மஹ்பாப் தெரிவித்தார்.

84 வயதுடைய முஹ்மட் அரிஸ் சமார் எனும் முதியவரே இச்சம்பவத்தில் உயிரிழந்ததாகவும், அவரது மகளான 57 வயதுடைய ஹமிசா உட்பட பேரப்பிள்ளைகளான 21 வயதுடைய எசாட்டி ஹைடா அஃபெண்டி, 18 வயதுடைய எசாட்டி ஹஸ்ரினா மற்றும் 16 வயதுடைய எசாட்டி ஹடிரா ஆகிய நால்வரும் காப்பாற்றப்பட்டதாகவும் சைஃபுல்பஹ்ரி மஹ்பாப் கூறினார்.

அந்த வரிசை வீடுகளில், இரண்டு வீடுகள் 20 விழுக்காடு அழிந்ததாகவும் எஞ்சிய ஒரு வீடு 80 விழுக்காடு அழிந்ததாகவும் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் Saifulbahri குறிப்பிட்டார்.

மோசமான சேதத்திற்கு உள்ளான வீட்டின் மேல் மாடியில் அம்முதியவரின் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

மேலும், அதிகாலை மணி 3.09 அளவில் தீ முழுமையாகக் கட்டுப்பாடிற்குள் கொண்டு வரப்பட்டது.

Source : Bernama

#FireAccident
#Johor
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews