கோலாலம்பூர், 15/03/2025 : 2024-ஆம் ஆண்டு IPT MITRA நுழைவு தொடக்கக்கட்ட உதவித் தொகை திட்டம், IPT 4.0 MITRA-வின் கீழ், பி40 பிரிவைச் சேர்ந்த 12,400 இந்திய மாணவர்களுக்கு இரண்டு கோடியே 50 லட்சம் ரிங்கிட்டை அப்பிரிவு ஒதுக்கியுள்ளது.
இதன் தொடர்பில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கட்டத்தில் பொது உயர்க்கல்வி கழகம், IPTA மற்றும் தனியார் உயர்க்கல்வி கழகம், IPTS மாணவர்களிடம் இருந்து 12,626 விண்ணப்பங்களை மித்ரா பெற்றுள்ளது.
அந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்ததில் 8,791 மாணவர்கள் IPT 4.0 MITRA-வைப் பெற தகுதி பெற்றுள்ளனர்.
தகுதி பெற்ற மாணவர்களுக்கு Bank Simpanan Nasional (BSN) வழி, ஒரு முறை இத்தொகை வழங்கப்படும்.
பி40 பிரிவு அல்லாதவர்கள், 3 மற்றும் 4 ஆம் ஆண்டு மாணவர்கள், கல்வி தகுதி போன்ற கட்டாய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத காரணங்களால் 3,835 மாணவர்களின் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
IPT 4.0 MITRA உதவி பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல் இன்று தொடங்கி மித்ரா அகப்பக்கத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
இந்த விண்ணப்பம் தொடர்பான மேல் விவரங்களுக்கு மித்ராவை 03-8886 6192 என்ற எண்ணில் காலை மணி 9 தொடங்கி மாலை மணி 5.30 வரை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், charaniyaa@mitra.gov.my அல்லது ktk prishanthini@mitra.gov.my என்ற மின்னஞ்சலையும் நாடலாம்.
Source : Bernama
#IPT4
#MITRA
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews