இளைஞர்களை மகிழ்விக்க மார்ச் 20 வெளியாகிறது ஹீரோ பிரண்ட்-யூ திரைப்படம்

இளைஞர்களை மகிழ்விக்க மார்ச் 20 வெளியாகிறது ஹீரோ பிரண்ட்-யூ திரைப்படம்

பெட்டலிங் ஜெயா, 08/03/2025 : முரளிகிருஷ்ணன் முனியன் – டவ் ஐஸ் எண்டர்டெயின்மண்ட் தயாரிப்பில், மார்டின் இயக்கத்தில் உருவான ஹீரோ பிரண்ட்-யூ திரைப்படம் எதிர்வருகின்ற மார்ச் 20ஆம் தேதி திரைக்கு வருகிறது. ஹீரோ பிரண்ட் -யூ திரைப்பட அறிமுகம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு 07 மார்ச் 2025 அன்று பெட்டலிங் ஜெயாவில் கிரிஸ்டல் க்ரவும் ஹோட்டலில் உள்ள இன்பினிட்டி கிளப்பில் நடைபெற்றது. தயரிப்பாளர் முரளிகிருஷ்ணன் முனியன் மற்றும் திரைப்படக் குழுவினர் பங்குபெற்ற இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. தேவகுரு, ரவின் ராவ், கவிதா, ஷாபி, தேவகன்னி, செலினா, சாஹா, செந்தில் குமரன், மார்ட்டின், பிரமிளா, திலீப் குமார் மற்றும் பலர் நடித்துள்ள ஹீரோ பிரண்ட்-யூ திரைப்படம் எதிர்வருகின்ற 20 மார்ச் மலேசியா முழுதும் திரைக்கு வர இருக்கிறது.

எம் கய்ஸ் ராஜா இந்த நிகழ்ச்சியை வழிநடத்தினார். திரைப்படம் கோவிட் சமயத்தில் உருவானாலும் பல்வேறு காரணங்களால் காலதாமதம் ஆகியது என்பதை தயாரிப்பாளர் முரளிகிருஷ்ணன் தெளிவுபடுத்தினார். பிரண்ட் ஜோன் பற்றிய இந்த திரைப்படம் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இளைஞர்களுக்கு மிகவும் கதைக்களமாக ஹீரோ பிரண்ட்-யூ திரைப்படம் அமையும் என திரைப்படக் குழுவினர் தெரிவித்தனர். பாக்கெட் பிளே இந்த திரைப்படத்தை வெளியீடு செய்கிறது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவிமாறன் மலேசியாவில் தயாரிக்கப்படும் உள்ளூர் திரைப்படங்களுக்கு அனைத்திற்கும் பாகுபாடின்றி அனைத்து கலைஞர்களும் ஆதரவு அளித்து வெற்றி பெற வைத்தால் மட்டுமே மலேசிய தமிழ் திரைப்படத் துறை வளர்ச்சி காணும் என வேண்டுகோள் விடுத்தார்.

இன்ப்ளூயன்சர்ஸ் மற்றும் பொது மக்கள் ஹீரோ பிரண்ட்-யூ திரைப்படத்திற்கு ஆதரவளித்து மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்பினால் திரைப்படக் குழுவினருடன் இணைந்து செயல் படலாம் என தயாரிப்பு தரப்பில் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

டவ் ஐஸ் எண்டர்டெயின்மண்ட் உடன் ஸ்மார்ட் குலோபல் மீடியா மற்றும் ஜாங்கிரி புரொடக்‌ஷன் ஹவுஸ் வும் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர். டவ் ஐஸ் எண்டர்டெயின்மண்ட் – முரளிகிருஷ்ணன் முனியன் தயாரிப்பில் இதற்கு முன் “சட்டை” என்கிற ஒரு திரைப்படம் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு மிட்சி மற்றும் இசை லிரேஷ் மன்மதன். ஹீரோ பிரண்ட்-யூ இளைஞர்களை மட்டுமல்லாமல் அனைவராலும் கண்டு ரசிக்கப்பட்டு வெற்றி பெற என் தமிழ் ஊடகக் குழுமம் மற்றும் என் தமிழ் வண்ணங்கள் சார்பில் வாழ்த்துகிறோம்.

Hero Friend U Trailer Link

Source & Copyright : Entamizh Online Media

#HeroFriendU
#MartinRaj
#DoveEyesEntertainment
#SmartGlobalMedia
#JhangriProductionHouse
#Thevaguru
#RavinRaoSantheran
#Kavitha
#Shabby
#MalaysianTamilMovie
#MalaysianMovie
#TamilMovie
#PressMeet
#Entamizh
#EntamizhVannangal
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews