புத்ராஜெயா, 08/03/2025 : மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MH370 விமானம் காணாமல் போன சம்பவம் நிகழ்ந்து இன்றோடு 11 ஆண்டுகள் ஆகிவிட்டன.
MH370 விமானத்தைத் தேடுவதற்கான தனது உறுதிப்பாட்டை அதிகாரப்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் இன்று மலேசியா மீண்டும் உறுதிப்படுத்திய நிலையில் இதன்வழி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குப் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டு டிசம்பர் 13-ஆம் தேதி அமைச்சரவை முடிவின்படி தென்னிந்தியப் பெருங்கடலில் சுமார் 15,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் புதிய தேடுதல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான இங்கிலாந்தின் Ocean Infinity நிறுவனம் முன்வைத்த பரிந்துரையை ஏற்க அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக போக்குவரத்து அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
இத்தேடல் நடவடிக்கை, ”கண்டுப்பிடிக்கப்படவில்லை என்றால் கட்டணம் இல்லை” எனும் கொள்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
அவ்விமானத்தின் எந்தவொரு பாகமும் கண்டுப்பிடிக்கப்படாவிட்டால் கட்டணம் எதுவும் செலுத்தப்படாது என்பதையும் அவ்வறிக்கை மீண்டும் உறுதிப்படுத்தியது.
இந்த தேடல் முயற்சியில் பொதுமக்களின் கவனம் அதிகம் இருப்பதை தனது தரப்பு அறிந்துள்ள நிலையில் மலேசிய அரசாங்க நடைமுறைகளுக்கு ஏற்ப ஒரு புதிய தேடல் ஒப்பந்தத்தை அது இறுதி செய்வதாக அவ்வமைச்சு கூறியது.
Source : Bernama
#MH370
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.