கோலாலம்பூர், 13/03/2025 : ஐந்து முக்கிய பண்புகள் நிறைந்த தனிநபர் ஒருவரை உருவாக்கும் நோக்கத்துடன் கல்வி அமைச்சு, 2027-ஆம் ஆண்டு பள்ளி பாடத்திட்டத்தை வரையும் பணியில் ஈடுபட்டுள்ளது.
அனைத்து அம்சங்களிலும் சமநிலையான வாழ்க்கை, வாழ்நாள் முழுவதும் கற்றல், ஒற்றுமையுடன் நல்லிணக்கம் மற்றும் நாகரீகமான குடிமக்கள் ஆகியவை அந்த முக்கிய பண்புகளாகும் என்று கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் 2022, 2023-ஆம் ஆண்டுகளில் பல்வேறு முக்கியத் தரப்பினருடன் பல விரிவான கலந்தாய்வுகளைத் தமது தரப்பு மேற்கொண்டதாக வோங் கா வோ கூறினார்.
வரையப்பட்டு வரும் பாடத்திட்டம் உலகளாவிய முன்னேற்றங்களுக்குப் பொருத்தமானதாகவும், பல்வேறு துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், தொழில்துறை மற்றும் அரசு சாரா நிறுவனங்களை உள்ளடக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“இந்த அமர்வில் கல்வி அமைச்சு, மாநிலக் கல்வித் துறை, மாவட்டக் கல்வி அலுவலகம், பள்ளி நிர்வாகிகள், அரசாங்க மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் கல்விக் கழக விரிவுரையாளர்கள், பொது உயர்க்கல்விக் கூடங்கள் மற்றும் தனியார் உயர்க் கலவிக் கூடங்களின் விரிவுரையாளர்கள் போன்ற பாடத்திட்ட வல்லுநர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்கின்றனர்”, என்று அவர் கூறினார்.
2027 பள்ளி பாடத்திட்டத்தின் வளர்ச்சிக்கான கட்டமைப்பை வலுப்படுத்தும் பொருட்டு விரிவான உள்ளடக்கத்தைப் பெறுவதற்காக தேசிய பாடத்திட்ட மாநாட்டையும் அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
Source : Bernama
#NewSchoolEducationPolicy
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.