கோலாலம்பூர், 11/03/2025 : கடலோரத்தில் ஏற்படும் மண் அரிப்பு பிரச்சனையைக் கையாள்வதற்கான செயல்முறைகளை விரைவுப்படுத்த மத்திய அரசாங்கம், திரெங்கானு மாநில அரசாங்கத்துடன் இணைந்து ஒரு செயற்குழுமை அமைக்கவுள்ளது.
மாநில மற்றும் மத்திய அரசாங்க நிறுவனங்களை உள்ளடக்கிய அக்குழுவிற்கு, திரெங்கானு மாநில மந்திரி புசாருடம் இணைந்து தாம் தலைமையேற்கவுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் கூறியுள்ளார்.
கடலோரத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு திட்டங்களும், ஆய்வுகளும், சீராக நடைபெறுவதை உறுதி செய்ய சமூகத்துடனான ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று எரிசக்தி மாற்றம், நீர் உருமாற்ற அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.
“கடலோரப் பகுதிகளில் பருவமழை பெய்யும்போது கடலோர அரிப்பு ஏற்படும். கடலோர அரிப்பு ஏற்படும்போது, நிலம் காணாமல் போவது ஒரு சவாலாக இருக்கின்றது. எனவே, இந்த திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசாங்கம் எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டியிருந்தது. அதை அப்புறப்படுத்த, ஒரு செயல்முறை உள்ளது. அந்த செயல்முறையை விரைவாக மேற்கொள்ள முடியாவிட்டால், தற்போது செயல்படுத்தி வரும் திட்டத்தின் கட்டுமானத்தைப் பாதிக்கும். இது கூட்டரசிற்கும் மாநிலங்களுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பை வழங்கும் ஒரு செயல்முறையாகும்”, என்று அவர் கூறினார்.
கடலோரத்தில் ஏற்படும் மண் அரிப்பு பிரச்சனை தொடர்பில், இன்று, மேலவையில் செனட்டர் சே அலியாஸ் ஹமிட் எழுப்பிய கூடுதல் கேள்விக்கு, டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் அவ்வாறு பதிலளித்தார்.
Source : Bernama
#HajiFadillahYusof
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.