ஜனவரி மாதம் வரை 46 ஆசியான் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன
கோலாலம்பூர், 11/03/2025 : 2025-ஆம் ஆண்டு ஆசியானுக்குத் தலைமையேற்கும் மலேசியா 377 கூட்டங்களை நடத்த திட்டமிட்டிருந்த வேளையில், கடந்த ஜனவரி மாதம் வரை 46 கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளன.
ஜனவரி 18, 19 ஆம் தேதிகளில் லங்காவியில் ஆழமான விவாதங்களுடன் தொடங்கிய ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் நான்கு சந்திப்புகள் இடம்பெற்றதாக வெளியுறவு துணை அமைச்சர் டத்தோ முஹமட் அலாமின் கூறினார்.
“மலேசியா நடத்திய ஒவ்வொரு கூட்டங்களும் அனைத்து அமைச்சுகள், நிறுவனங்கள், உள்ளூர் அதிகாரிகள், அரசு நிறுவனங்கள் மற்றும் GLC-களின் ஒத்துழைப்புடன் மூலம் சுமூகமாக நடந்தன. கலந்து கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகள், விருந்தினராக மலேசியாவின் நல்ல விருந்தோம்பல் குறித்து நேர்மறையான கருத்துகளை தெரிவித்தனர்”, என்று அவர் கூறினார்.
ஆசியானுக்குத் தலைமையேற்றிருக்கும் மலேசியாவின் முன்னெடுப்புகள் மற்றும் கூட்டங்கள் தொடர்பில், இன்று, மேலவையில் செனட்டர் டான் ஶ்ரீ அனிஃபா அமான் எழுப்பிய கேள்விக்கு, முஹமட் அலாமின் அவ்வாறு பதிலளித்தார்.
Source : Bernama
#ASEAN
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews