3R விவகாரங்களைப் பேசும் நபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும்

3R விவகாரங்களைப் பேசும் நபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும்

கோலாலம்பூர், 07/03/2025 : நாட்டின் அமைதி தொடர்ந்து பேணப்படுவதை உறுதி செய்ய, 3R எனப்படும் இனம், மதம் மற்றும் அரசக் குடும்பம் தொடர்பிலான விவகாரங்கள் குறித்து கூற்றுகளை வெளியிடும் நபர்களுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகளை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதிகரிக்க வேண்டும்.

உணர்வுப்பூர்வமான விவகாரங்களைத் தூண்டும் தரப்பினர்கள் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்துறை அமைச்சு, அரச மலேசிய போலீஸ் படை, தொடர்பு அமைச்சு மற்றும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி ஆகியவற்றிற்கு அதிகாரம் உள்ளது.

3R தொடர்பிலான சிக்கலைத் தூண்டும் நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அமைச்சுகளும் நிறுவனங்களும் பொறுப்பேற்கும் என்று, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், டத்தோ ஏரன் அகோ டாகாங், இன்று தமது X தளத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இவ்விவகாரத்தைக் கையாள்வது குறித்து விளக்கமளித்த அவர், சீர்த்திருத்தம் மற்றும் தலையீட்டு அணுகுமுறைகளில் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு கவனம் செலுத்துவதையும் கூறினார்.

eSepakat செயலியின் மூலம் நாட்டில் நிலவும் ஒற்றுமையிண்மை சிக்கலை மேம்படுத்துவதற்கான அம்சங்கள், தொடர்புடைய நிறுவனங்களுக்கு அனுப்பப்படும்.

Source : Bernama

#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.